இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 4 பேர் விடுதலை
நாகப்பட்டினத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 4 மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
ராமேசுவரம்,
நாகப்பட்டினத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 4 மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் 4 பேரும் நேற்று அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். இவர்களும், ஏற்கனவே விடுவிக்கப்பட்ட 16 பேரும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள் விரைவில் தமிழகம் அழைத்துவரப்பட உள்ளதாக, நிரபராதி மீனவர்கள் விடுதலை கூட்டமைப்பு தலைவர் யு.அருளானந்தம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வவுனியா சிறையில் இருக்கும் ராமேசுவரம் மீனவர்கள் 7 பேருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று ராமேசுவரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story