கடலில் தத்தளித்த சென்னை மீனவர்கள் 7 பேர் சதுரங்கப்பட்டினத்தில் மீட்பு
கடலில் தத்தளித்த சென்னை மீனவர்கள் 7 பேர் சதுரங்கப்பட்டினத்தில் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
கல்பாக்கம்,
சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த மீனவர்கள் வீரமணி (வயது 45), குப்புராஜ் (58), சந்திரசேகர் (38), சரத்குமார் (25), விஜய் (25), நாகராஜ் (22), பிரசாத்(20) ஆகியோர் 12-ந் தேதி அதிகாலையில் பெரிய படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நேற்றுமுன்தினம் மீன் பிடித்துக்கொண்டு கரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
திடீரென வழியில் அவர்கள் வந்த படகின் என்ஜின் பழுதடைந்தது. அப்போது படகின் நங்கூரம் உடைந்தது தெரியவந்தது. அதேசமயம் கடலில் காற்றின் வேகமும் அலையும் அதிகமாக இருந்தது.
இதனால் அவர்கள் வந்த படகு காற்றின் போக்கில் அடித்து இழுத்து செல்லப்பட்டது. இது குறித்து கடலோர காவல் படை குழுமத்துக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் வீரர்கள் உடனடியாக கடலுக்கு விரைந்து சென்று மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அந்த படகு கல்பாக்கத்தை அடுத்த சதுரங்கப்பட்டினம் கடற்கரையோரம் நேற்று மாலை அடித்து வரப்பட்டது. உடனே சதுரங்கப்பட்டினம் மீனவர் கள் உதவியுடன் கடலோர காவல் படையினர் 7 மீனவர்களையும் பத்திரமாக மீட்டனர்.

Related Tags :
Next Story