2ஜி வழக்கு தீர்ப்பு: பா.ஜனதா மன்னிப்பு கேட்குமா? -நடிகை குஷ்பு


2ஜி வழக்கு தீர்ப்பு:  பா.ஜனதா மன்னிப்பு கேட்குமா? -நடிகை குஷ்பு
x
தினத்தந்தி 21 Dec 2017 8:11 PM GMT (Updated: 21 Dec 2017 8:11 PM GMT)

2ஜி வழக்கு தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

சென்னை,

நடிகையும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு கருத்து தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது:-

“2ஜி வழக்கு தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்த வழக்கில் ஆரம்பம் முதலே பொய் குற்றச்சாட்டுகள்தான் கூறப்பட்டு வந்தன. தற்போது இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவருமே விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். எனவே பா.ஜனதா மன்னிப்பு கேட்குமா? என்று எனக்கு தெரியவில்லை. 2014-ம் ஆண்டு 2ஜி ஊழல் குற்றச்சாட்டுகளை கூறித்தான் பா.ஜனதா ஆட்சியை பிடித்தது. சுவரொட்டிகளிலும், பிரசாரங்களிலும் காங்கிரஸ் கட்சியும் தி.மு.க.வும் ரூ.1.76 லட்சம் கோடி ஊழல் செய்து விட்டதாகவும் விளம்பரப்படுத்தினர். ஆனால் தற்போது அனைவரும் விடுதலையாகி உள்ளதால் பா.ஜனதா கட்சியினர் மன்னிப்பு கேட்பார்களா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். வழக்கில் இருந்து விடுதலையான அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்”.

இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.

Next Story