தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்யும் வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறுகையில், இன்று (சனிக்கிழமை) தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும், சென்னை மற்றும் புறநகர்களில் வானம் மேக மூட்டமாக காணப்படும் என்றும் தெரிவித்தார்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:–
திருத்துறைப்பூண்டி, திருவாரூர், ஆனைக்காரன் சத்திரம், முத்துப்பேட்டை, மதுக்கூர், பட்டுக்கோட்டை, நன்னிலம், பரங்கிப்பேட்டை, பாபநாசம் தலா 2 செ.மீ., அதிராம்பட்டினம், நாகப்பட்டினம், மன்னார்குடி, நீடாமங்கலம், காரைக்கால், பாண்டவராயர் தலை, குடவாசல், புதுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, சீர்காழி, சிவகாசி, ஸ்ரீமுஷ்ணம், கொடைக்கானல் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.
Related Tags :
Next Story