ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய சசிகலாவுக்கு 15 நாள் ‘கெடு’


ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய சசிகலாவுக்கு 15 நாள் ‘கெடு’
x
தினத்தந்தி 23 Dec 2017 12:15 AM GMT (Updated: 22 Dec 2017 6:40 PM GMT)

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான ஆவணங்களையும் 15 நாட் களுக்குள் தாக்கல் செய்ய சசிகலாவுக்கு விசாரணை ஆணையம் ‘கெடு’ விதித்து சம்மன் அனுப்பி உள்ளது.

சென்னை,

மறைந்த முதல்-அமைச் சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசா ரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு கடந்த செப்டம் பர் மாதம் 25-ந் தேதி உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் விசா ரணை ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

ஆணையத்தில் இதுவரை 120 பேர் புகார் மனுக்கள் அளித்துள்ளனர். 28 பேர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்து உள்ளனர். ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகார் மனுக்கள் மற்றும் பிரமாண பத்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் கடந்த மாதம் 22-ந் தேதி முதல் ஆணையம் நேரடி விசாரணை நடத்தி வருகிறது. நேற்று வரை 17 பேர் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்து உள்ளனர்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை தொடர்ந்து விசாரணை ஆணையம் மீண்டும் அடுத்த மாதம் (ஜனவரி) 2-ந் தேதி கூடுகிறது. ஜனவரி 2-ந் தேதி முதல் தொடர்ந்து 4 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர்களை அழைத்து விசாரிக்க ஆணையம் முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் சசிகலா, அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப்ரெட்டி, துணைத்தலைவர் பிரீத்தா ரெட்டி ஆகியோருக்கு விசாரணை ஆணையம் ‘சம்மன்’ அனுப்பி உள்ளது.

சசிகலாவுக்கு அனுப்பி உள்ள சம்மனில், ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக தங்களிடம் உள்ள அனைத்து ஆவணங்களையும் 15 நாட்களுக்குள் ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

இந்த சம்மன் சசிகலா இருந்து வரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலை முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த சம்மனில், சசிகலா தன்னிடம் ஆவணங்கள் இருப்பதாக தெரிவித்தால் அதை சிறைத்துறை அதிகாரி பெற்று ஆணையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Next Story