ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: தபால் வாக்கு முடிவில் தி.மு.க. முன்னிலை


ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்:  தபால் வாக்கு முடிவில் தி.மு.க. முன்னிலை
x
தினத்தந்தி 24 Dec 2017 8:32 AM IST (Updated: 24 Dec 2017 8:32 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான தபால் வாக்கு எண்ணிக்கை முடிவில் தி.மு.க. முன்னிலை பெற்றுள்ளது. ஒரே ஒரு தபால் வாக்கு தி.மு.க.வுக்கு கிடைத்துள்ளது.

ஆர்.கே. நகர்,

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு இந்த மாதம் 21-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.  அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருது கணேஷ், பா.ஜ.க. சார்பில் கரு.நாகராஜன் ஆகியோரும், சுயேட்சை வேட்பாளராக சசிகலா உறவினர் டி.டி.வி. தினகரன் உள்பட 59 பேர் தேர்தலில் போட்டியிட்டனர்.

இந்த நிலையில், வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்தது.

இதனை அடுத்து ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது.  முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன.  இதில் தி.மு.க. முன்னிலை பெற்றுள்ளது.  ஒரே ஒரு தபால் வாக்கு தி.மு.க.வுக்கு கிடைத்துள்ளது.  தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

Next Story