மு.க. ஸ்டாலின் கூறியது போல் ஹவாலா பாணியில் டிடிவி தினகரன் வெற்றி - அமைச்சர் ஜெயக்குமார்
மு.க. ஸ்டாலின் கூறியது போல் ஹவாலா பாணியில் டிடிவி தினகரன் வெற்றி பெற்று உள்ளார் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்து உள்ளார்.
சென்னை,
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஆளும் கட்சியான அதிமுகவை 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து டிடிவி தினகரன் வெற்றி பெற்று உள்ளார். தேர்தலில் எதிர்க்கட்சியான திமுக டெபாசிட் இழந்தது. தேர்தலில் பணநாயகம் வென்று உள்ளது என எதிர்க்கட்சிகள் தரப்பில் ஒரேபோன்று விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆளும் கட்சியின் சார்பில் அமைச்சர் ஜெயக்குமாரும் ஜனநாயகம் படுகுழியில் தள்ளப்பட்டு பணநாயகம் வெற்றி பெற்றுள்ளது என விமர்சனம் செய்து உள்ளார்.
ஆர்.கே.நகர் தேர்தலில் பண நாயகம் வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் ஆணையம் விதிகளை மதித்து, நியாயமாக செயல்பட்டோம். தினகரன் வெற்றி ஆட்சியை பாதிக்காது. கட்சியில் இருந்து ஒரு செங்கல்லை கூட அவரால் எடுக்க முடியாது. தினகரன் குறுக்கு வழியில் வெற்றி பெற்றுள்ளார். தினகரனின் வெற்றி இடைத்தேர்தலோடு முடிந்து விடும். ஜெயலலிதாவை ஏமாற்றியர்வர்கள், மக்களை ஏமாற்றி தற்காலிக வெற்றி பெற்று உள்ளனர். பணத்தை கொடுத்து குறுக்கு வழியில் வெற்றி பெறுவது சரியானது இல்லை. இரட்டை இலை சின்னம் மீது பற்று வைத்துள்ளவர்கள் நிறம் மாறமாட்டார்கள்.
குறுக்கு வழியில் வெற்றி பெறுவது தினகரனுக்கு கைவந்த கலையாகும். மு.க.ஸ்டாலின் கூறியது போல் ஹவாலா பாணியில் தினகரன் வெற்றி பெற்று உள்ளார் என கூறிஉள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.
2019-ல் பொதுத்தேர்தல் வரும், அதில் அதிமுக வெற்றி பெறும் எனவும் குறிப்பிட்டார்.
Related Tags :
Next Story