ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு: ‘‘விஷாலைப்போல் தவறான முடிவு எடுத்த பா.ஜனதா’’ நடிகர் ராதாரவி கருத்து
ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட டி.டி.வி தினகரன் அதிக ஓட்டுகள் வாங்கியது அரசியல் கட்சிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை,
ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட டி.டி.வி தினகரன் அதிக ஓட்டுகள் வாங்கியது அரசியல் கட்சிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் சங்க பொதுச்செயலாளராகவும் தயாரிப்பாளர்கள் சங்க தலைவராகவும் இருக்கும் நடிகர் விஷாலும் இந்த தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்து அந்த மனு தள்ளுபடியானதால் ஆதரவாளர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவமும் நடந்தது.
தற்போது இந்த தேர்தல் முடிவு குறித்து நடிகர் சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் ராதாரவி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:–
‘‘ஆர்.கே.நகர் தொகுதியில் அதிக வாக்குகள் வாங்கிய டி.டி.வி. தினகரனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஆளும் கட்சியான அ.தி.மு.க இந்த தேர்தலில் பின்னடைவை சந்தித்து இருக்கிறது. இது மக்களுக்கு ஆளும் கட்சி மீதான அதிருப்தியையும் நம்பிக்கையின்மையையும் காட்டுகிறது.
அவர்களுக்கு இதைவிட அவமானம் இருக்க முடியாது. பா.ஜனதாவால் இன்னும் 200 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பது இந்த தேர்தல் மூலம் தெரிய வந்து இருக்கிறது. விஷாலைப் போலவே பா.ஜனதாவும் ஆர்.கே.நகரில் போட்டியிட முடிவு எடுத்தது தவறானது.’’
இவ்வாறு ராதாரவி கூறியுள்ளார்.
Related Tags :
Next Story