டி.டி.வி.தினகரனுக்கு நடிகர் சரத்குமார் வாழ்த்து
மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா மறைந்து ஒரு ஆண்டுகள் ஆன நிலையில், அதே தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றிருக்கிறார்.
சென்னை,
-
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா மறைந்து ஒரு ஆண்டுகள் ஆன நிலையில், அதே தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றிருக்கிறார். கடந்த முறை ஆளும் கட்சி ஆதரவு வேட்பாளர் என்றிருந்த நிலை தற்போது இல்லாமல், கடந்த முறை கிடைத்த சின்னமும் தற்போது கிடைக்கப்பெறாமல், வெற்றி பெற்றிருக்கும் டி.டி.வி.தினகரனுக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
ஒரு தேர்தலில் வாக்காளர்கள் அளித்திருக்கும் தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும் என்ற அரசியல் யதார்த்தம் மற்றும் அரசியல் நாகரிகம் கருதி ஆர்.கே.நகர். இடைத்தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் டி.டி.வி.தினகரனுக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story