ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் முடிவு சொல்வது என்ன? கவுரவத்தை காப்பாற்ற பொழிந்த பண மழையின் பின்னணி
ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் அடுத்து அவர் ஆட்சிக்கு பிரஷர் கொடுப்பாரோ? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை,
ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் அடுத்து அவர் ஆட்சிக்கு பிரஷர் கொடுப்பாரோ? என்ற கேள்வி எழுந்துள்ளது. கவுரவத்தை காப்பாற்றுவதற்கே அதிக அளவு பண மழை பொழிந்ததும் தெரியவந்துள்ளது.
இந்திய அரசியல் வரலாற்றில் தமிழக அரசியல் களம் எப்போதுமே வித்தியாசமானதாகத் தான் இருந்து வந்திருக்கிறது. மத்தியில் ஆட்சியை பிடிக்கும் கட்சிகள், தமிழகத்தில் திராவிட கட்சிகளை நம்பித்தான் தேர்தலை சந்திக்க வேண்டியிருக்கிறது. தேர்தலில் தனியாக நின்று பார்த்தாலும், மண்ணை கவ்வ வேண்டியதாகி விடுகிறது.
காமராஜர் காலத்திற்கு பிறகு தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. என்று மாறி மாறியே ஆட்சியை பிடித்து வந்திருக்கின்றன. எம்.ஜி.ஆருக்கு பிறகு, கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து 2-வது முறையாக அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி செய்து வருகிறது. திடீரென ஜெயலலிதாவும் மறைந்ததால், அவரது தொகுதியான ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் வந்தது.
பொதுவாக, தமிழகத்தில் இடைத்தேர்தல் என்றாலே, ஆளும் கட்சி தான் அதில் வெற்றியும் பெற்று வந்திருக்கிறது என்பதை கடந்த கால வரலாற்றை புரட்டிப் பார்த்தால் தெரிந்துகொள்ளலாம். இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதை ஆளும் கட்சியினர் கவுரவமாகவே கருதி வருகின்றனர்.
அதற்கு எடுத்துக்காட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் நடந்த திருமங்கலம் இடைத்தேர்தல் ஆகும். அந்தத் தேர்தலில் தான் ‘ஓட்டுக்கு நோட்டு’ என்ற புது பார்முலா புகுத்தப்பட்டது. அதன் பிறகு, நடந்த பொதுத் தேர்தல்களிலும் இதே பார்முலாவே பின்பற்றப்படுகிறது. மக்கள் மனதிலும் ஜனநாயகம் என்பது மரித்துப்போய், பணநாயகம் என்பது துளிர்க்கத் தொடங்கிவிட்டது.
ஆனால், இது நாட்டுக்கு நல்லதா? என்பதை மக்கள் யோசித்து பார்க்க வேண்டும். ‘ஓட்டுக்கு நோட்டு’ என்று வருபவர்களிடம் மக்களும் கேள்வி எதுவும் எழுப்புவதில்லை. பணத்தை வாங்கிக் கொண்டு அமைதியாகி விடுகின்றனர். அதுதான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் வெளிப்பட்டது. “இந்த பணம் உங்களுக்கு எப்படி வந்தது?” என்று பணம் கொடுத்து ஓட்டு கேட்க வருபவர்களிடம் மக்கள் கேள்வி கேட்டாலே, பின்னணியில் ஒளிந்து கொண்டிருக்கும் ஊழல் வெளிச்சத்துக்கு வந்துவிடும். ஆனால், மக்கள் அதை விரும்பவில்லை என்பதையே அவர்களது மவுனம் வெளிக்காட்டுகிறது.
இதற்கு மத்தியில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றி ஆளும் கட்சிக்கும் கிடைக்காமல், எதிர்க்கட்சிக்கும் கிடைக்காமல் சுயேச்சையாக போட்டியிட்ட டி.டி.வி.தினகரனுக்கு கிடைத்திருக்கிறது. இதன் மூலம், இடைத்தேர்தலில் ஆளும் கட்சிக்கே வெற்றி என்ற தொடர் வரலாற்று சாதனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதி மக்களும், ஆளும் கட்சிக்கும் அங்கீகாரம் கொடுக்காமல், எதிர்க்கட்சியையும் அங்கீகரிக்காமல், மூன்றாவதாக ஒருவருக்கு அங்கீகாரம் கொடுத்திருக்கிறார்கள் என்றால், அதற்கு உண்மையான காரணம் என்ன? என்பது அவர்களுக்கே வெளிச்சம். இது ஒரு பக்கம் இருந்தாலும், ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன், உண்மையான அ.தி.மு.க. தாங்கள் தான் என்றும், 1½ கோடி தொண்டர்களும் தங்கள் பின்னால் இருப்பதாகவும் இப்போதே கூறத் தொடங்கிவிட்டார். எனவே, ஜெயலலிதா மறைவுக்கு பின்னால் பிரிந்து இணைந்த அ.தி.மு.க.வில் மீண்டும் பிளவு ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது.
இனி சட்டமன்றத்துக்கு உள்ளே சுயேச்சை எம்.எல்.ஏ.வாக டி.டி.வி.தினகரன் நுழைய இருக்கிறார். ஏற்கனவே, மறைமுகமாக அவருக்கு ஆதரவு தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிலரும் அவருடன் கைகோர்ப்பார்கள் என தெரிகிறது. இது அ.தி.மு.க. அரசுக்குத்தான் பெரிய தலைவலியை ஏற்படுத்தும். என்றாலும், எதிர்க்கட்சியான தி.மு.க., இனி நடப்பவை அனைத்தும் தங்களுக்கு சாதகமாகவே அமையும் என்று நம்பிக் கொண்டிருக்கிறது.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் ‘குக்கர்’ சின்னத்தில் போட்டியிட்டார். தேர்தலில் ‘விசில்’ பறக்க வெற்றி பெற்ற குக்கர், இனி ஆட்சிக்கும் ‘பிரஷர்’ நெருக்கடி கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இதை தேர்தல் பிரசாரத்தின் போதே, டி.டி.வி.தினகரனும் உறுதிப்படுத்தியுள்ளார்.
எந்த இடைத்தேர்தலிலும் இல்லாத அளவுக்கு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அளவுக்கு அதிகமாக பண மழை பொழிந்ததற்கான காரணம் இனி தான் தமிழக மக்களுக்கு தெரியத் தொடங்கும். கவுரவத்தை காப்பாற்றிக்கொள்ள ஆளும் கட்சியும், கவுரவத்தை உருவாக்கிக்கொள்ள சுயேச்சை வேட்பாளரும் எதிரும் புதிருமாக மோதிக்கொண்டதே, பண மழை கன மழையாக பொழிவதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இந்த மோதலுக்கு இடையே எதிர்க்கட்சியான தி.மு.க. காணாமல் போய்விட்டது.
கவுரவம் ஒன்றையே மையமாக வைத்து நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு, அரசியல் கட்சிகளுக்கு இடையே ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தினாலும், மக்களிடையே எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதையே காட்டுகிறது.

Related Tags :
Next Story