சசிகலா மீதான நம்பிக்கைக்கு சான்றுதான் ஆர்கே நகர் வெற்றி-இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா


சசிகலா மீதான நம்பிக்கைக்கு சான்றுதான் ஆர்கே நகர் வெற்றி-இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா
x
தினத்தந்தி 25 Dec 2017 11:08 AM IST (Updated: 25 Dec 2017 11:08 AM IST)
t-max-icont-min-icon

சசிகலா மீதான நம்பிக்கைக்கு சான்றுதான் ஆர்கே நகர் வெற்றி என இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா கூறி உள்ளார்.

சென்னை

 டிடிவி தினகரன் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை விட அவர் 40 ஆயிரத்து 707 வாக்குகள் அதிகம் பெற்று இருந்தார். இது குறித்து இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா, தமது பேஸ்புக் பக்கத்தில்  இது சசிகலா மீதான நம்பிக்கைக்கான சான்று என பதிவிட்டு  உள்ளார். இதனால் தினகரன் ஆதரவாளர்கள் கொந்தளித்து போயுள்ளனர்.

தினகரனின் வெற்றியை அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். முறைத்துக் கொண்டு நின்ற இளவரசி மகன் விவேக் நிர்வாகியாக இருக்கும்  ஜெயா டிவியில் தினகரனை ஆதரித்து செய்திகள் வெளியிட்டு வருகின்றனர்.

ஜெயலலிதா சிகிச்சை வீடியோ ரிலீஸ் விவகாரத்தில் தினகரன் மீது கோபத்தை மறைமுகமாக காட்டியிருந்தார் கிருஷ்ணப்பிரியா. இப்போது ஆர்கே நகரில் தினகரன் வென்றதை அவர் சசிகலா  மீதான நம்பிக்கைக்கு சான்றுதான் என கூறி உள்ளார்.

தம்முடைய பேஸ்புக் பக்கத்தில், சின்னம்மா அவர்கள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிகைக்கு சான்றுதான் ஆர்.கே  நகர் தேர்தல் முடிவுகள் என பதிவிட்டிருக்கிறார் கிருஷ்ணப்பிரியா. 




Next Story