காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை தமிழக காங்கிரஸ் தொடர்ந்து போராடும் என்று, சென்னையில் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில செயற்குழு கூட்டம் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார்.
எம்.எஸ்.திரவியம், சிவராஜசேகரன், வீரபாண்டியன் உள்பட மாவட்ட தலைவர்கள், முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் காவிரி பிரச்சினை, பெட்ரோல்-டீசல் விலை உயர்வு உள்பட பல்வேறு மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
காவிரி மேலாண்மை வாரியம்
அதனைத்தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
* சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவினை ஏற்று காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் வரை தமிழக காங்கிரஸ் தொடர்ந்து போராடும்.
* காவிரி விவகாரத்தில் சித்தராமையாவுக்கு ராகுல்காந்தி அழுத்தம் கொடுக்காதது ஏன்? என்ற தேவையில்லாத கருத்துகளை தொடர்ந்து எழுப்பி, இந்த விவகாரத்தில் மக்களின் கவனத்தை திசை திருப்பும் மத்திய அரசின் முயற்சிக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.
* நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க கோரி மத்திய அரசை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.
* பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும்.
* தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்திட உரிய நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்க வேண்டும்.
ராகுல்காந்திக்கு நன்றி
* 1989-ம் ஆண்டு வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் எந்தவித திருத்தமும் செய்ய கூடாது.
* நெசவு தொழிலை காக்கும் விதமாக பட்டு கைத்தறி நெசவாளர்களின் கடன்களை மத்திய அரசு ரத்து செய்யவேண்டும். நூல்களையும் மானிய விலையில் வழங்கவேண்டும்.
* காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைந்ததும் மீனவர்களுக்காக தனி அமைச்சகம் ஏற்படுத்தி தரப்படும் என்று கூறிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது.
* காவிரி உரிமை மீட்பு பயணத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.
இவை உள்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் மகிளா காங்கிரஸ் அகில இந்திய பொதுச்செயலாளர் நக்மா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர்கள் எச்.வசந்தகுமார், தாமோதரன், பொதுச்செயலாளர் கே.சிரஞ்சீவி, எஸ்.சி. பிரிவு தலைவர் கு.செல்வபெருந்தகை, இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன் ஆரூண், ஊடகப்பிரிவு தலைவர் கோபண்ணா ஆகியோர் பங்கேற்றனர்.
திருநாவுக்கரசர் பேட்டி
இதனைத்தொடர்ந்து சு.திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- செயற்குழு கூட்டத்தில் ஏராளமான மாவட்ட தலைவர்கள் பங்கேற்காமல் புறக்கணித்து விட்டார்களே?
பதில்:- புறக்கணிப்பு என்பதே தவறு. 72 மாவட்ட தலைவர்களில் ஒரு சிலரே வரவில்லை. அவர்களும் தாங்கள் வரமுடியாத காரணத்தை என்னிடம் தொலைபேசி வாயிலாக கூறிவிட்டனர். குறிப்பாக சென்னையை எடுத்துக்கொண்டால் ஒரு மாவட்ட தலைவர் மட்டும் தான் வரவில்லை. எனவே பெரும்பாலானோர் கூட்டத்துக்கு வந்துவிட்டனர்.
தமிழக அமைச்சரவையில் ஒற்றுமை இல்லை
கேள்வி:- உங்கள் தனிப்பட்ட விருப்பத்தினால் மட்டுமே செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டதாக கூறப்படுகிறதே?
பதில்:- அது தவறு. வராதவர்கள் பற்றி எனக்கு தெரியாது. அப்படி முழுமையான காரணம் வேண்டுமென்றால் கூட்டத்தில் பங்கேற்காதவர்களை போய் கேளுங்கள்.
கேள்வி:- அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தமிழக அமைச்சர்கள் மாறுபட்ட கருத்துகளை தெரிவிக்கின்றனரே?
பதில்:- துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசின் கருத்தை பெறவில்லை என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். ஆனால் அந்த நியமனத்தை வரவேற்று அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளிக்கிறார். இது அமைச்சரவையின் ஒற்றுமையின்மையை காட்டுகிறது. எங்களை பொறுத்தவரை துணைவேந்தரை நியமித்ததில் கவர்னர் தவறு செய்துவிட்டார். அதை கண்டிக்கிறோம்.
கேள்வி:- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி 11-ந்தேதி பா.ம.க. நடத்தும் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பீர்களா?
பதில்:- காவிரி பிரச்சினையில் மக்கள் நலனுக்காக எந்தவித போராட்டத்தையும் காங்கிரஸ் நடத்தும், தேவையான போராட்டத்துக்கு ஆதரவையும் கொடுக்கும். அந்தவகையில் 11-ந்தேதி நடக்கும் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும்படி பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி என்னிடம் தொலைபேசியில் கேட்டுக்கொண்டார். பா.ம.க.வின் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்போம். மேற்கண்டவாறு அவர் பதில் அளித்தார்.
செயற்குழு கூட்டத்தின் நிறைவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சாந்தி ரோஸ்லின் ஏற்பாட்டின் பேரில் எம்.ஜி.ஆர்.-அம்மா-தீபா பேரவை மாவட்ட செயலாளர் ஜெயபிரியா தலைமையில் ஏராளமான பெண்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். அவர்களுக்கு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் வாழ்த்து தெரிவித்தார்.

Related Tags :
Next Story