ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் 10 பேருக்கு சம்மன்
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் 10 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. #Jayalalithaa #ADMK
சென்னை
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. கடந்த 7 ந்தேதி ஆஜரான முன்னாள் தலைமை செயலாளர்கள் ஷீலாபால கிருஷ்ணன், ராமமோகனராவ், இருதய நோய் தடுப்பு சிறப்பு அரசு மருத்துவர்கள் முரளிதரன், தினேஷ் ஆகியோரிடம் சசிகலா தரப்பு வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் 10 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 16ம் தேதி கிருஷ்ணபிரியா, விவேக், அரசு மருத்துவர்கள் சுதா சேஷையன், சுவாமிநாதன், அப்பலோ மருத்துவர் சத்யபாமா, வெங்கட்ரமணன், கார்த்திகேயன், சமையலர் ராஜம்மாள் ஆகியோர் ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.
17ம் தேதி ஐஏஎஸ் அதிகாரி ராமலிங்கம், 18-ம் தேதி பூங்குன்றன் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது.
Related Tags :
Next Story