‘ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நிறுத்தவேண்டும் என்பதை ஏற்க முடியாது’ மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நிறுத்தவேண்டும் என்பதை ஏற்க முடியாது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
ஆலந்தூர்,
பொன்.ராதா கிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சி காலத்தில் காவிரி பிரச்சினையை மிக தீவிரமாக மாற்றி ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் துரோகம் செய்த செயல் கண்டனத்துக்கு உரியது. இப்போது அவர்கள் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டப்போவதாக கூறுவது, தங்களுக்கு தாங்களே கருப்பு கொடி காட்டுவது போன்றதாகும்.
ஒட்டுமொத்த தமிழகத்திற்கு துணையாக இருக்கின்ற பிரதமர் மோடியின் செயல்பாடுகளை தமிழக மக்கள் என்றும் பாராட்டுவார் கள், மதிப்பார்கள்.
தமிழக மக்களை ஏமாற்ற தி.மு.க. நாடகம் ஆடுகிறது. கர்நாடகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கொண்டுவர பாடுபடுகிறார்கள்.
தமிழகத்திற்கு இன்னும் 5 ஆண்டுகளுக்கு, உச்சநீதிமன்றம் சொன்னாலும், மத்திய அரசு சொன்னாலும் தண்ணீர் திறந்துவிட மாட்டோம் என்று, தமிழக விவசாயிகளை வாட்டுகின்ற வகையில் நடந்து கொள்ளும் சித்தராமையாவின் அரசை மீண்டும் கொண்டுவர இவர்கள் போராடி கொண்டு இருக்கிறார்கள். தமிழகத்துக்கு இதை விட மோசமான துரோகத்தை தி.மு.க. செய்துவிடமுடியாது.
திருச்சியில் மு.க.ஸ்டாலின் நடைபயணத்தில் செய்தியாளர்கள் மீது நடந்த தாக்குதலை பெரிதாக கருதவில்லை. அவர் தமிழக மக்கள் மீதே தாக்குதல் நடத்திக்கொண்டு இருக்கிறார். தி.மு.க. மக்களுக்கு துரோகம் செய்து கொண்டு இருக்கிறது.
ஜ.பி.எல். போட்டியில் எனக்கு விரும்பம் கிடையாது. அதில் நிறைய விஷயங்களை ஏற்றுக் கொள்ளமுடியாது. ஆனால் அதை இளைஞர்கள் ரசிக்கிறார்கள். கைப்பந்து, கால்பந்து போட்டிகள் நடக்கின்றன. அவற்றை நிறுத்த வேண்டும். ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் நிறுத்த வேண்டும். கிரிக்கெட் போட்டிகளை நிறுத்த வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இவ்வாறு பொன்.ராதா கிருஷ்ணன் கூறினார்.
Related Tags :
Next Story