ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு: மைதானத்திற்கு பூட்டுப்போட்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் போராட்டம்
ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு: மைதானத்திற்கு பூட்டுப்போட்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் போராட்டம் நடத்தினர் அவர்களை போலீசார் கைது செய்தனர். #IPL #CauveryMangementBoard #CauveryIssue
சென்னை
காவிரி விவகாரம் தொடர்பாக ஐபிஎல் போட்டியை சென்னையில் நடத்தக்கூடாது என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சேப்பாக்கத்தில் இன்று நடைபெறுகிறது. மும்பையுடனான போட்டி முடிந்து சென்னை அணியினர் திரும்பிய நிலையில், கொல்கத்தா வீரர்களும் நேற்றுமாலை சென்னை வந்தடைந்தனர். வீரர்கள் பலத்த பாதுகாப்புடன் ஓட்டல்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வீரர்கள் தங்குமிடத்திலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த ஓட்டல்களுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் போட்டி நடைபெறும் மைதானத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் போட்டி நடைபெறும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 13 துணை ஆணையர்கள் தலைமையில் 2,000 காவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர் கமாண்டோ படையின் ஒரு அணியும், ஆயுதப் படையைச் சேர்ந்த அதி தீவிர படையின் 4 குழுக்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் கதவை இழுத்து பூட்டு போட்டு தமிழக வாழ்வுரிமை கட்சியினர்
போராட்டத்தில் ஈடுபட்டனர். போட்டியைப் புறக்கணிக்க வலியுறுத்தி முழக்கமிட்டவர்களை போலீசார் தற்போது கைது செய்தனர்.
Related Tags :
Next Story