காவிரி வாரியத்துக்காக சென்னை அண்ணாசாலையில் இன்று மாலை 5 மணிக்கு போராட்டம் - பாரதிராஜா பேட்டி
காவிரி வாரியத்துக்காக சென்னை அண்ணாசாலையில் இன்று மாலை 5 மணிக்கு போராட்டம் நடத்தப்படும் என பாரதிராஜா பேட்டி அளித்துள்ளார். #CauveryProtest #Bharathiraja
சென்னை
சினிமா இயக்குனர்கள் பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, அமீர், தங்கர்பச்சான், கவுதமன், நடிகர் சத்யராஜ் ஆகியோர் தலைமையில் புதிய பேரவை ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அதற்கு, “தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை” என்று பெயரிடப்பட்டுள்ளது.
தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை சார்பில் பாரதிராஜா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கிரிக்கெட் வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை; எங்கள் உணர்வுக்கு மதிப்பளித்து அதை தள்ளிப்போடதான் நாங்கள் கூறுகிறோம். ஓரணியில் திரண்டுள்ள இளைஞர்களை திசைதிருப்பும் முயற்சியாக ஐபிஎல் நடைபெறுகிறது. ஐபிஎல் போட்டி நடைபெற்றாலும் தார்மீக ரீதியாக எதிர்ப்பு தெரிவிப்பது எங்கள் கடமை.
தேசியம் பேசுபவர்களால், கர்நாடகாவில் இருந்து தண்ணீர் பெற்றுத்தர முடியவில்லை. இன்று மாலை சென்னை அண்ணா சாலையில் கூடுவோம். காவிரி வாரியத்துக்காக சென்னை அண்ணாசாலையில் இன்று மாலை 5 மணிக்கு போராட்டம் நடத்தப்படும். பிரதமர் தமிழகம் வரும்போது நிச்சயம் கருப்புக்கொடி காட்டுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
மணியரசன் கூறியதாவது:- தமிழர்களுக்கு ஆதரவாக பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை செயல்பட வேண்டும். தமிழகத்தில் பாஜக துளிர்க்க முடியாது என கூறினார்.
Related Tags :
Next Story