பேரணி ...ஆர்ப்பாட்டம்... தடியடி... போர்க்களமாக மாறிய சேப்பாக்கம் பகுதி
பேரணி ...ஆர்ப்பாட்டம்... தடியடி... போர்க்களமாக மாறிய சேப்பாக்கம் பகுதி #IPL #CSKvsKKR #Bharathiraja #Vairamuthu
சென்னை
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர், மாணவர்கள், விவசாயிகள், இளைஞர்கள் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.
காவிரி விவகாரம் தொடர்பாக ஐபிஎல் போட்டியை சென்னையில் நடத்தக்கூடாது என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சேப்பாக்கத்தில் இன்று நடைபெறுகிறது. இதை தொடர்ந்து , வீரர்கள் தங்கும் ஓட்டல்களுக்கு 5 அடுக்கு பாதுக்காப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் போட்டி நடைபெறும் மைதானத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் போட்டி நடைபெறும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 13 துணை ஆணையர்கள் தலைமையில் 2,000 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர் கமாண்டோ படையின் ஒரு அணியும், ஆயுதப் படையைச் சேர்ந்த அதி தீவிர படையின் 4 குழுக்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காவல்துறையின் பாதுகாப்பு வளையத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம். மைதானத்தின் உள்ளே 2,300 காவலர்களும், வெளியே மற்றும் அண்ணா சாலை வரை 2000-க்கு மேற்பட்ட காவலர்களும் குவிப்பு. 4 கூடுதல் ஆணையாளர்கள் தலைமையில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.வரலாற்றிலேயே தற்போதுதான் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சேப்பாக்கம் மைஅதானத்தை சுற்றி உள்ள சாலைகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்
போராட்டக்குழு முற்றுகையிடலாம் என சென்னை சேப்பாக்கம் முழுதும் அறிவிக்கப்படாத 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா சாலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்து வருகின்றனர்.
ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் அண்ணா சாலையில் போராட்டம் நடத்தினர்.
திருவல்லிக்கேணி பகுதியிலிருந்து பேரணியாக வந்து சேப்பாக்கம் மைதானத்தை முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர். இனையடுத்து அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.சேப்பாக்கம் மைதானத்திற்கு பூட்டு போராட்டம் நடத்த முயன்ற சிலரையும் போலீசார் கைது செய்தனர்.
ரஜினிரசிகர்கள் கைது இதற்கிடையில் கிரிக்கெட்போட்டியை காண வந்த ரசிகர்களுக்கு ரஜினி அமைப்பை சேர்ந்தவர்கள் சிலர் கறுப்பு பேட்ஜ் அணிந்தனர். கறுப்பு பேட்ஜ் விநியோகித்த 50 பேரை போலீசார் கைது செய்தனர். பல்வேறு தரப்பினர் போராட்டங்களால் சென்னை சேப்பாக்கம் பகுதி முழுவதும் போர்க்களம் போல் காட்சி அளிக்கிறது.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகர் அபி சரவணன் மற்றும் பல துணை நடிகர்கள் போராட்டத்திற்கு வருகை தந்துள்ளனர். தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில் திரைப்பட இயக்குநர்கள் சீமான், பாரதி ராஜா, வைரமுத்து,வெற்றிமாறன், தங்கர் பச்சான், கவுதமன் உள்ளிட்டோரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
தடுப்புகளை தள்ளிவிட்டு வாலாஜா சாலைக்குள் நுழைந்து போரட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
தமிழர்களின் உணர்வை மத்திய அரசு அவமதிக்கிறது .ஐபிஎல் போட்டிக்கு எதிரானவர்கள் அல்ல நாங்கள், எங்க உணர்வுகளை வெளிப்படுத்தவே போராட்டம் என சீமான் கூறினார்
Related Tags :
Next Story