திண்டிவனத்தில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாமக நிர்வாகி மின்சாரம் தாக்கி படுகாயம்


திண்டிவனத்தில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாமக  நிர்வாகி மின்சாரம் தாக்கி  படுகாயம்
x
தினத்தந்தி 11 April 2018 11:56 AM IST (Updated: 11 April 2018 11:56 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனத்தில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணி துணைத்தலைவர் ரஞ்சித் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார். #CauveryIssue #CauveryManagementBoard #PMKProtest

சென்னை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று கடையடைப்பு போராட்டம் மற்றும் ரெயில் மறியல் நடந்தது.

திண்டிவனத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதில்  திண்டிவனம் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டு இருந்த குருவாயூர் ரெயிலை மறித்து ரெயில் மீது ஏறி  கோஷம் எழுப்பியவாரே பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர்.

அப்போது பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணி துணைத் தலைவர் ரஞ்சித் என்பவர்  சக்தி வாய்ந்த மின்சார கம்பி உரசி தீப்பிடித்து எரிதார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதைத் தொடர்ந்து ரஞ்சித் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 


Next Story