ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய கம்யூ. மூத்த தலைவர் நல்லக்கண்ணு உள்ளிட்டோர் கைது


ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய கம்யூ. மூத்த தலைவர் நல்லக்கண்ணு உள்ளிட்டோர் கைது
x
தினத்தந்தி 11 April 2018 3:54 PM IST (Updated: 11 April 2018 3:54 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய கம்யூ. மூத்த தலைவர் நல்லக்கண்ணு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி, 

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் நடந்து வரும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. அ.குமரெட்டியாபுரம் கிராமமக்களின் போராட்டம் 59-வது நாளாக இன்று நீடிக்கிறது. 

மேலும் பண்டாரம்பட்டி, சங்கரப்பேரி, மடத்தூர், மீளவிட்டான், தெற்குவீரபாண்டியபுரம் ஆகிய கிராம மக்களும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இதேபோன்று சில்வர்புரம், சுப்பிரமணியபுரம், பாளையாபுரம் கிராமமக்கள் சில்வர்புரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தபால் தந்தி காலனி, முருகேசன் காலனி, 3-வது மைல், மாதவன் நகர், சிலோன்காலனி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பகுதி மக்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் மொத்தம் 12 இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. 

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்காக இறக்குமதி செய்து கொண்டுவரப்பட்ட தாமிர தாது மணல் தூத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்தது. அவற்றை   ஸ்டெர்லைட் ஆலைக்கு  நேற்று இரவு 8 லாரிகள் மூலம் கொண்டு செல்லும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதனை அறிந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக்குழுவை சேர்ந்த வக்கீல் கிருஷ்ணமூர்த்தி, பிரபு உள்ளிட்டோர் சிப்காட் சாலை பகுதியில் 3 லாரிகளை மறித்தனர். ஆலை செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் தாமிர உற்பத்திக்கான மூலப்பொருட்களை கொண்டு செல்வது குறித்து அதனை கொண்டு சென்றவர்களிடம் கேட்டனர்.  ஆனால் அவர்கள் சரியான பதில் கூறவில்லை. இதையடுத்து அந்த லாரிகளை போராட்ட குழுவினர் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தூத்துக்குடி  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய கம்யூ. மூத்த தலைவர் நல்லக்கண்ணு உள்ளிட்டோர் கைது  செய்யப்பட்டனர்.

நாசரேத் மர்காஷஸ் கலைக்கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் வகுப்புகளை புறக்கணித்து திடீரென்று ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக நிரந்தரமாக மூட வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

Next Story