பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி பாதுகாப்பு பணியில் 5000 போலீசார்
பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி பாதுகாப்பு பணியில் 5000 போலீசார் ஈடுபட உள்ளனர் என காவல் துறை தெரிவித்து உள்ளது. #PMModi
சென்னை,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவதும் தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று ஐ.பி.எல். போட்டிக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் காரணமாக, மீதம் இருக்கும் போட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்ற பிசிசிஐ பரிசீலனை செய்து வருகிறது என தகவல்கள் வெளியாகி உள்ளது. காவிரி விவகாரத்தில் ஏற்கனவே பிரதமர் மோடி சென்னை வருகையில் கருப்பு கொடி காட்டப்படும் என தமிழக எதிர்க்கட்சிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் தரப்பில் பொதுமக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. போராட்டம் வலுப்பெறும் நிலையில் பிரதமர் மோடி சென்னை வருவதால் பாதுகாப்பு அதிஉயர் உஷார் நிலைப்படுத்தப்படுகிறது.
பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி பாதுகாப்பு பணியில் 5000 போலீசார் ஈடுபட உள்ளனர் என காவல் துறை தெரிவித்து உள்ளது.
சென்னை ஐஐடி, அடையாறு புற்றுநோய் மையத்திற்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அடையாறு, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் முக்கியமான இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கமாண்டோ படை மற்றும் சிறப்பு அதிரடி படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய ராணுவம் தங்களுக்கு தேவையான பெரும்பாலான தளவாட பொருட்களை தயாரித்து வருகிறது. அத்துடன் நம் நாட்டில் உள்ள ஒரு சில சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ராணுவத்திற்கு தேவையான தளவாட பொருட்களை தயாரித்து வழங்குகின்றன. அனைத்து சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களையும் ஊக்குவிக்கும் வகையில் பாதுகாப்புத்துறை சார்பில் ராணுவ கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த கண்காட்சி சென்னை- மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தையில் நடக்கிறது. நாளை 12-ந்தேதி பிரதமர் நரேந்திரமோடி முறைப்படி கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.
Related Tags :
Next Story