மீன்பிடி தடைகாலம் 14-ந் தேதி நள்ளிரவு முதல் அமல்
தமிழகம் முழுவதும் மீன்பிடி தடைகாலம் வருகிற 14-ந் தேதி நள்ளிரவு முதல் தொடங்க உள்ளது.
ராமேசுவரம்,
தமிழகம் முழுவதும் உள்ள கடல் பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் மே மாதம் 29-ந் தேதி வரையிலும் 45 நாட்கள் மீன்கள் இனப்பெருக்க காலமாக இருந்து வந்தது. இந்த தடை கால சீசனில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் என்பதால் சென்னை முதல் கன்னியாகுமரி வரை தமிழக விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல் இந்த 45 நாள் தடை காலமானது 61 நாட்களாக நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டின் தடைகாலம் வருகிற 14-ந் தேதி நள்ளிரவு முதல் தொடங்க உள்ளது. இதுபற்றி ராமேசுவரம் மீன்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
இந்தாண்டின் மீன்பிடி தடை காலமானது 14-ந் தேதி நள்ளிரவு 12 மணியில் இருந்து அமலுக்கு வருகிறது. அன்றிலிருந்து மீன்பிடிக்க செல்ல மீனவர்களுக்கு அனுமதி இல்லை. டோக்கன் வழங்கப்படமாட்டாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story