அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சூரப்பா பதவியேற்றார்


அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சூரப்பா பதவியேற்றார்
x
தினத்தந்தி 12 April 2018 10:37 AM IST (Updated: 12 April 2018 10:37 AM IST)
t-max-icont-min-icon

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சூரப்பா பதவியேற்றுக்கொண்டார். #AnnaUniversityVC #AnnaUniversity #MKSurappa


சென்னை, 

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தவர் ராஜாராம். இவரது பணி காலம் கடந்த 2016, மே 26-ல் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து அந்த பதவிக்கு 2 வருடங்களாக துணைவேந்தர் யாரும் நியமிக்கப்படாத நிலையில், துணைவேந்தராக எம்.கே. சூரப்பாவை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் 5-ம் தேதி நியமித்தார். சென்னை அண்ணா பல்கலை கழகத்தின் துணைவேந்தராக அவர் 3 ஆண்டுகள் இருப்பார்.  இவர் ஐ.ஐ.டி. இயக்குநராக 6 ஆண்டுகள் பணியாற்றியவர்.

 இந்திய அறிவியல் நிறுவனத்தில் 24 ஆண்டுகள் பேராசிரியராகவும் பணியாற்றி உள்ளார். உலோக பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ள சூரப்பா, 150 ஆய்வு கட்டுரைகளை எழுதியுள்ளார். தனது 4 ஆய்வு கட்டுரைகளுக்கு காப்புரிமையும் பெற்றுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சூரப்பா, தமிழகத்தின் அண்ணா பல்கலை கழகத்தின் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அரசியல் கட்சிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. போராட்டமும் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே ஆளுநர் மாளிகையின் தரப்பில் நியமனம் நியாயப்படுத்தப்பட்டது. ஆளுநரால் நியமனம் செய்யப்பட்ட சூரப்பா அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவி ஏற்றுக்கொண்டார். 

Next Story