தமிழகத்தில் ராணுவ காரிடார் அமைக்க நிதி அமைச்சகம் அனுமதி - நிர்மலா சீதாராமன்


தமிழகத்தில் ராணுவ காரிடார் அமைக்க நிதி அமைச்சகம் அனுமதி - நிர்மலா சீதாராமன்
x
தினத்தந்தி 12 April 2018 11:15 AM IST (Updated: 12 April 2018 11:15 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் ராணுவ காரிடார் அமைக்க நிதி அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். #DefenceExpo2018 #DEFEXPO2018

சென்னை

பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரதமர் மோடி, சென்னை விமானநிலையம் வந்திறங்கினார்.

பிரதமர் மோடி, விமான நிலையத்தில் வந்திறங்கிய சமயத்தில் அந்தப் பகுதியைச் சுற்றி கறுப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டன.

அவருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை பரங்கிமலைப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனைய வருகை பகுதியில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்திய இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், ராம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை விமான நிலையம் அருகே போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கைது.

கறுப்பு கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாரதிராஜா, வெற்றிமாறன், அமீர், உள்ளிட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

பிரதமர் மோடி, 10 மணிக்கு முன்னதாக விமானநிலையம் வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், விமானநிலையத்தைச் சுற்றிய பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விமானநிலைய வரவேற்புக்கு பிறகு ஹெலிகாப்டர் மூலம் திருவிடந்தை சென்றார் பிரதமர். அங்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் ராணுவ கண்டகாட்சி தொடங்கியது. ராணுவ தளவாட கண்காட்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கிறார் பிரதமர்.

ராணுவ தளவாட கண்காட்சி விழாவில் பிரதமர் மோடி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்று உள்ளனர்.

விழாவில் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறும் போது, 

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ராணுவ தளவாட உற்பத்தியை அதிகரிக்க அழைக்கிறேன் . ராணுவத் தளவாடங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு முன்னேறியுள்ளோம். தமிழகத்தில் ராணுவ காரிடார் அமைக்க நிதி அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது - என கூறினார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழன்சாமி பேசும் போது,

பாதுகாப்புத்துறை வளர்ச்சியில் தமிழகம் 20%க்கும் மேல் பங்காற்றி வருகிறது. பாதுகாப்பு வளர்ச்சியில் இந்த வருடம் தமிழகத்தின் பங்கு 25% ஆக இருக்கும் -
தமிழக நிறுவனங்கள் தளவாட உற்பத்தியில் நுழைய வேண்டும்.  தமிழகத்தில் ராணுவ தளவாட உற்பத்திக்கான தொழிற்பாதையை அறிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி  தமிழக பண்டைய ஆட்சியாளர்கள் சேர, சோழ, பாண்டியர்களை மேற்கோள்காட்டி உரையாற்றினார்.

Next Story