ஸ்டாலின் தலைமையில், காவிரி உரிமை மீட்புப் பயணம் கடலூரில் நிறைவு


ஸ்டாலின் தலைமையில், காவிரி உரிமை மீட்புப் பயணம் கடலூரில் நிறைவு
x
தினத்தந்தி 12 April 2018 8:32 PM IST (Updated: 12 April 2018 8:32 PM IST)
t-max-icont-min-icon

ஸ்டாலின் தலைமையில், காவிரி உரிமை மீட்புப் பயணம் கடலூரில் நிறைவடைந்தது. #MKStalin #CauveryRights

சென்னை.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் காவிரி உரிமை மீட்பு பயணத்தை மேற்கொண்டு வருகிறார். கடந்த 7-ந்தேதி திருச்சி முக்கொம்பில் இருந்து தனது பயணத்தை அவர் தொடங்கினார். 

அவருடன் காங்கிரஸ், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலைசிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி உள்பட அனைத்துக்கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் இந்த பயணத்தில் கலந்து கொண்டனர்.  இந்த நிலையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில், கடந்த 7-ம் தேதி தொடங்கிய காவிரி உரிமை மீட்புப் பயணம் கடலூரில் நிறைவடைந்தது. கடலூர் வந்தடைந்த மு.க.ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். 

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் இருந்து மற்றொரு குழுவினர் நடைபயணத்தை தொடங்கினர். இந்த 2 குழுவும் இன்று வியாழக்கிழமை கடலூர் மாவட்டத்துக்கு வந்தடைந்தனர்.

கடலூரில் இருந்து ஏறக்குறைய 1,000 வாகனங்களில் சென்னையை நோக்கி ஒரு மிகப்பெரிய பேரணியாக சென்று, தமிழக கவர்னரை சந்திக்க உள்ளதாக மு.க.ஸ்டாலின் நாகை மாவட்டம் செம்பியமாதேவி கிராமம் நடைபெற்ற கூட்டத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது. 

Next Story