காவிரி வாரியம் அமைக்கும் வரை தமிழகத்தில் போராட்டம் தொடரும்: ஆளுநரை சந்தித்த பின் மு.க ஸ்டாலின் பேட்டி
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழகத்தில் போராட்டம் தொடரும் என்று ஆளுநரை சந்தித்த பின் மு.க ஸ்டாலின் தெரிவித்தார். #Mkstalin #CauveryProtest
சென்னை,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி காவிரி உரிமை மீட்பு பயணத்தை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டார். 6-நாட்களாக நடைபெற்ற காவிரி உரிமை மீட்பு பயணம் நேற்று நிறைவு பெற்றது.
இதையடுத்து, இன்று அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார். மு.க ஸ்டாலினுடன் தோழமை கட்சித்தலைவர்களும் ஆளுநரை சந்தித்தனர்.
இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் கூறியதாவது:- “ காவிரி விவகாரத்தால் தமிழகத்தில் அசாதாரண நிலவுவது குறித்து ஆளுநரிடம் கூறினேம். பிரதமர் மோடியை அரசியல் கட்சி தலைவர்களும் விவசாயிகளும் சந்திக்க ஏற்பாடு செய்வதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என ஆளுநரிடம் கூறியுள்ளோம்.
ஒரிரு தினங்களில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்வோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழகத்தில் போராட்டம் தொடரும்” என்றார்.
Related Tags :
Next Story