ரஷியாவுடன் 7 புரிந்துணர்வு ஒப்பந்தம்


ரஷியாவுடன் 7 புரிந்துணர்வு ஒப்பந்தம்
x
தினத்தந்தி 14 April 2018 4:30 AM IST (Updated: 14 April 2018 1:55 AM IST)
t-max-icont-min-icon

இந்தியா சார்பில் ரஷிய நாட்டுடன் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு உள்ளன.

சென்னை,

சென்னையை அடுத்த திருவிடந்தையில் நடைபெறும் ராணுவ தளவாட கண்காட்சியையொட்டி இந்தியா சார்பில் ரஷிய நாட்டுடன் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. அவை வருமாறு:-

* எல் அன் டி நிறுவனமும், ரோஸோ போரோ எக்ஸ்போர்ட் நிறுவனமும் இணைந்து, இந்திய பாதுகாப்புத் துறைக்கு, நவீன போர் கருவிகளை தயாரித்துக்கொடுப்பது.

* ஆனந்த் டெக்னாலஜிஸ் நிறுவனமும், ஜேஎஸ்சி நிறுவனமும் இணைந்து, இந்திய ராணுவத்துக்கு, தகவல் தொடர்பு கருவிகள் மற்றும் உதிரிபாகங்களை தயாரிப்பது.

* ஸ்பேஸ் எரா மற்றும் ஜேஎஸ்சி நிறுவனமும் இணைந்து, ஹெலிகாப்டர் மற்றும் போர் விமான ஓட்டிகளுடன் தொடர்புகொள்வதற்கு, தேவையான தகவல் தொடர்பு கருவிகளை தயாரிப்பது.

* ஓஸ்க்ரோசோமரைன் மற்றும் ஜேஎஸ்சி நிறுவனம் இணைந்து, போர் கப்பலுக்கு தேவையான, நவீன ரேடார் கருவிகளை தயாரிப்பது.

* கிரஸ்னே பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் ஜேஎஸ்சி நிறுவனம் இணைந்து, இந்திய கடற்படை கப்பலுக்கு தேவையான பாகங்களை செய்து கொடுப்பது.

* ஆனந்த் டெக்னாலஜி மற்றும் ஜேஎஸ்சி நிறுவனம் இணைந்து, இந்திய ராணுவத்தில் பயன்படுத்துப்படும், பீரங்கி வாகன பராமரிப்புக்கு, தேவையான கருவிகளை செய்து தருவது.

* அவியாடெக் மற்றும் ஜேஎஸ்சி நிறுவனம் இணைந்து கடற்படை கப்பல்கள் பராமரிப்புக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவது. 

Next Story