அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்


அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்
x
தினத்தந்தி 14 April 2018 11:30 AM IST (Updated: 14 April 2018 12:12 PM IST)
t-max-icont-min-icon

சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இன்று மரியாதை செலுத்தினர். #AmbedkarStatue

சென்னை,

டாக்டர் அம்பேத்கரின் 127வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்கள் இன்று மரியாதை செலுத்தினர்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கீழ் இருந்த அம்பேத்கரின் உருவ படத்திற்கு முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினர்.

இதேபோன்று சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மரியாதை செலுத்தினார். 

அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களால் தொழில் முதலீடுகள் குறையும்.  இதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில் முனைவோர் அச்சம் அடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.


Next Story