காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு உரிய நீதி கிடைக்கும் - அமைச்சர் ஜெயக்குமார்


காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு உரிய நீதி கிடைக்கும் - அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 15 April 2018 2:48 PM IST (Updated: 15 April 2018 2:48 PM IST)
t-max-icont-min-icon

காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு உரிய நீதி கிடைக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். #Jayakumar #CauveryIssue

சென்னை,

அமைச்சர் ஜெயக்குமார் செய்தியார்களிடம் கூறியதாவது:

காவிரி விவகாரத்தில் தனித்து செயல்படும் எண்ணம் கிடையாது. ஒற்றுமையுடன் செயல்படும் நோக்கில்தான் அரசு சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. 

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பாயத்தின் முடிவை தான், உச்சநீதிமன்றம் மத்திய அரசை செயல்படுத்த கூறியிருக்கிறது. காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு உரிய நீதி கிடைக்கும். ஸ்கீம் என்பதற்கு அர்த்தம் தெரியவில்லை எனில் டிக்ஸ்னரியை பார்த்து மத்திய அரசு தெரிந்து கொள்ளட்டும்.ஸ்கீம் என்பது மேலாண்மை வாரியம் தான் என உச்சநீதிமன்றமே தெளிவுபடுத்தியுள்ளது.

காவிரிக்காக என்றென்றும் உரிமையை காக்கும் இயக்கம் அதிமுகதான். மெரினாவில் அறவழியில் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து அரசு ஆலோசித்து முடிவெடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story