கமல்ஹாசன் அடுத்த மாதம் கோவை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் 13-ந்தேதி பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்
கோவையில் கமல்ஹாசன் அடுத்த மாதம் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 13-ந்தேதி பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
சென்னை,
கோவையில் கமல்ஹாசன் அடுத்த மாதம் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 13-ந்தேதி பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
மக்கள் நீதி மய்யம்
மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை மதுரை பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் தொடங்கினார். இதையடுத்து மாவட்ட வாரியாக பொதுகூட்டங்கள் மூலம் தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்திக்க கமல்ஹாசன் திட்டமிட்டார்.
அதன்படி கடந்த 3-ந்தேதி திருச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. உலக மகளிர் தினத்தையொட்டி சென்னையிலும் பொதுக்கூட்டம் நடந்தது.
இந்தநிலையில் கமல்ஹாசன் தனது அடுத்த பொதுக்கூட்டத்தை கோவை மாவட்டத்தில் நடத்துவதற்கு முடிவு செய்துள்ளார்.
திருப்பூர், நீலகிரி, கோவையில்...
இதுகுறித்து மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் மே மாதம் 11, 12, 13 ஆகிய 3 நாட்கள் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். திருப்பூர், நீலகிரி, கோவை ஆகிய இடங்களுக்கு சென்று மக்களை சந்திக்கிறார். நெசவாளர்களிடம் குறைகளை கேட்க உள்ளார்.
13-ந்தேதி பொதுக்கூட்டத்துக்கு நடைபெற உள்ளது. மதுரை, திருச்சி பொதுக்கூட்டத்தை போன்று கோவையிலும் பிரமாண்டமாக கூட்டத்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவை மாவட்டத்தில் தனது சுற்றுப்பயணம், பொதுக்கூட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கமல்ஹாசன் விரைவில் வெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story