ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட்டு விரைவில் சாகும்வரை உண்ணாவிரதம் - டிடிவி தினகரன் அறிவிப்பு


ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட்டு விரைவில் சாகும்வரை உண்ணாவிரதம் - டிடிவி தினகரன் அறிவிப்பு
x
தினத்தந்தி 17 April 2018 8:42 PM IST (Updated: 17 April 2018 8:42 PM IST)
t-max-icont-min-icon

ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட்டு விரைவில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக டிடிவி தினகரன் அறிவித்து உள்ளார். #TTVDhinakaran #SterliteProtest


தூத்துக்குடி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களும் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆதரவை தெரிவித்து வருகின்றன. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட்டு விரைவில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார். 

அமைச்சர்கள், அரசு குறித்து பேசியதற்காக என்மீது வழக்கு தொடர்ந்தால் ஏற்றுக்கொள்கிறேன். மக்களுக்காக செயல்படுபவர்களே வெற்றி பெற முடியும்; தமிழகத்தை சோமாலியாவாக மாற்றம் செய்யும் முயற்சி நடைபெறுகிறது என குற்றம் சாட்டினார் டிடிவி தினகரன். 

ஆர்.கே.நகரில் இரட்டை இலையை தோற்கடிக்கக் கூடிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டது எனவும் குறிப்பிட்டார். 


Next Story