கல்லூரி பேராசிரியைக்கு எதிராக மகளிர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த உதவி பேராசிரியைக்கு எதிராக, தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பில் சென்னை சேப்பாக்கம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை,
அருப்புக்கோட்டை கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலா தேவி, 4 மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தை கண்டித்து தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மகளிர் காங்கிரஸ் தலைவி ஜான்சிராணி தலைமை தாங்கினார். அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
ஆர்ப்பாட்டத்தின் போது, திடீரென குஷ்பு மற்றும் பெண்கள் வாலாஜா சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது நிருபர்களிடம் குஷ்பு கூறியதாவது:-
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் எந்த விசாரணை நடந்தாலும் உண்மை வெளிவரப்போவதில்லை. இந்த விவகாரத்தில் பின்னணியில் இருப்பது யார், யார்? என்ற விவரங்களை பேராசிரியை தெரிவித்து இருக்கிறார். அவர்களை மக்கள் முன்னிலையில் அடையாளம் காட்ட வேண்டும்.
எல்லா துறைகளிலும் இந்த மாதிரி பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நிகழ்த்தப்படுகிறது. மாணவி நிர்பயா கொலை வழக்கில் என்ன தண்டனை கொடுத்தோம்? குற்றவாளிகள் நமது பணத்தில் ஜெயிலுக்குள் சொகுசாக வாழ்கிறார்கள். நமது சட்டங்களிலும், தண்டனைகளிலும் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story