மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி வழங்க முடியாது - காவல்துறை பதில்


மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி வழங்க முடியாது - காவல்துறை பதில்
x
தினத்தந்தி 19 April 2018 8:16 PM IST (Updated: 19 April 2018 8:16 PM IST)
t-max-icont-min-icon

மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி வழங்க முடியாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. #ChennaiPolice


சென்னை,


‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சென்னை மெரினா கடற்கரையில் 30 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க அனுமதி அளிக்கக் கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பி.அய்யாகண்ணு தரப்பில் சென்னை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றது. ஏற்கனவே 90 நாட்கள் மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதி கோரியதற்கு ஐகோர்ட்டு, ‘மெரினா கடற்கரை என்பது பொதுமக்கள் வந்து செல்லும் பொது இடம். அங்கு தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த 90 நாட்களுக்கு அனுமதி வழங்க உத்தரவிட முடியாது’ என்றது. 

‘டெல்லியில் அய்யாகண்ணு மற்றும் விவசாயிகள் அரை நிர்வாணம் உள்ளிட்ட பலவிதமான போராட்டங்களை நடத்தினர். அரை நிர்வாணமாக போராட்டங்களை நடத்த வேண்டாம் என்று அய்யாகண்ணு மற்றும் அவரது சங்க உறுப்பினர்களான விவசாயிகள் ஆகியோருக்கு அறிவுரை வழங்குங்கள்’ என்று மனுதாரர் வக்கீலிடம் நீதிபதி டி.ராஜா கேட்டுக்கொண்டார்.  30 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க அனுமதி அளிக்கக் கோரியிருந்த விவகாரத்தில் காவல்துறை பதிலை அளித்து உள்ளது. அதில் மெரினாவில் எந்தவிதமான போராட்டமும் நடத்த அனுமதி அளிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
 
சென்னையில் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட ஏதேனும் ஒரு இடத்தில் அய்யாக்கண்ணு உண்ணாவிரதம் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story