மூன்றாம் தர கருத்துகளை தெரிவிக்கிறார்: எச்.ராஜாவுக்கு சரத்குமார் கண்டனம்
மூன்றாம் தர கருத்துகளை தெரிவிக்கிறார் என்று எச்.ராஜாவுக்கு சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பொதுவாழ்வில் இருக்கும் அனைவரையும் பற்றி தேவையற்ற, அநாகரிகமான பதிவுகளை தொடர்ந்து செய்துவரும் எச்.ராஜா, முதலில் தனது கட்சியில் இருக்கும் தலைவர்களை பற்றி எதிர்க்கட்சிகாரர்கள் கூறுவதற்கு பதில்சொல்ல தயாராக இருக்கிறாரா?.
நாளுக்கு நாள் அவரது அநாகரிக அரசியல் பேச்சுகள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. இதுபோன்ற அருவருக்கத்தக்க மூன்றாம் தர கருத்துகளை அவர் உடனடியாக நிறுத்தாவிட்டால், கட்சியின் தலைமை அவரை கண்டிக்காவிட்டால், உங்கள் அரசியல் களமும், தரமும் அவ்வாறுதான் உள்ளது என்று மக்கள் முடிவு செய்துவிடுவார்கள். பெண் இனத்தை இழிவுபடுத்திய ஒருவர் உங்களுடன் அரசியல் களத்தில் இருப்பது பா.ஜ.க தலைமைக்கு தகுதிதானா, தலைகுனிவு வெட்கப்படவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story