மெரீனா கடற்கரையில் குளித்தால் உடல் நலம் பாதிக்கும் அபாயம்


மெரீனா கடற்கரையில் குளித்தால்  உடல் நலம் பாதிக்கும் அபாயம்
x
தினத்தந்தி 20 April 2018 4:53 PM IST (Updated: 20 April 2018 4:53 PM IST)
t-max-icont-min-icon

மத்திய கடல் ஆராய்ச்சி மையம் மேற்கொண்ட ஆராய்ச்சியில், மெரீனா கடற்கரையில் குளித்தால் பல்வேறு நோய்கள் தாக்கப்பட்டு உடல் நலம் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உள்ளதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது. #MarinaBeach

சென்னை

சென்னை கடல் நீரில் உள்ள மாசு குறித்து ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. இந்த ஆய்வில் சென்னையில் உள்ள 5 கடற்கரையில் உள்ள மொத்தம் 192 மாதிரிகளை சேகரித்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது

மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், எண்ணூர், கோவளம் ஆகிய ஐந்து பகுதிகளில் இருந்து கோடை மற்றும் மழைக் காலங்களில் உள்ள நீரின் மாதிரிகள் சேகரித்து, விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வு மேற்கொண்டதில் அதிக அளவிலான பாக்டீரியாக்கள் மெரீனா கடல் நீரில் உள்ளதாக தெரிய வந்துள்ளது

இதற்கு காரணம், அடையாறு மற்றும் கூவம் ஆறுகளின் வழியாக செல்லும் கழிவு நீர் தொடர்ந்து கடலில் கலந்து வருவதால் பாக்டீரியாக்கள் அதிகரித்து , கடல் நீர் மாசு அடைந்து உள்ளதாக ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது

மெரினா கடலில் குளிப்பதால் செரிமான பிரச்சினை, வயிற்றுப் போக்கு, வாந்தி, வயிற்று வலி உள்ளிட்ட உடல் பாதிப்புகள்  ஏற்படுகிறதாம். அதே வேளையில், சென்னையை பொறுத்தவரை கோவளம் பீச் குறைந்த மாசு கலந்ததாக உள்ளதாம்.

Next Story