சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அனுமதியின்றி கூடியதால், சிம்பு ரசிகர்கள் 7 பேர் கைது
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அனுமதியின்றி கூடியதால், சிம்பு ரசிகர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர். #Simbu
சென்னை
மன்சூர் அலிகானை சிறையில் அடைத்தது ஏன் என தெரிந்து கொள்ள ஆணையர் அலுவலகத்துக்கு நடிகர் சிம்பு இன்று வருகை தந்தார். அப்போது நடிகர் சிம்புவின் ரசிகர்கள் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கைது செய்யப்பட்டனர். காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு சிம்பு சென்ற போது அவர் ரசிகர்கள் அங்கு கூடினர். அனுமதியின்றி சட்டவிரோதமாக கூடியதாக சிம்பு ரசிகர்கள் 7 பேரை போலீஸ் கைது செய்தது.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னையில் போராட்டத்தின் போது காவல்துறையினரை தாக்கியதில் உடன்பாடில்லை. மன்சூர் அலிகான் தவறாக பேசியிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்; மன்சூர் அலிகான் கைது சரியென்றால் அவரை போல் பேசிய அனைவரையும் கைது செய்ய வேண்டும் . மாநில அரசு என்றால் எனக்கு என்னவென்று தெரியாது இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story