விருதுநகர்: சாத்தூர் அருகே 2 குழந்தைகளை படுகொலை செய்த தந்தை தலைமறைவு


விருதுநகர்:  சாத்தூர் அருகே 2 குழந்தைகளை படுகொலை செய்த தந்தை தலைமறைவு
x
தினத்தந்தி 22 April 2018 9:11 AM IST (Updated: 22 April 2018 9:11 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் சாத்தூர் அருகே சல்வார்பட்டியில் 2 குழந்தைகளை படுகொலை செய்த தந்தை தலைமறைவாகி உள்ளார்.

விருதுநகர்,

விருதுநகரில் சாத்தூர் அருகே சல்வார்பட்டியில் வசித்து வந்தவர் அந்தோணிராஜ்.  இவரது மனைவி முனீஸ்வரி.  இந்த நிலையில் குடும்ப பிரச்னையால் கணவர் தனது 2 குழந்தைகளை படுகொலை செய்துள்ளார்.

அவர்கள் மகள் முத்துலட்சுமி, மகன் முனீஸ்வரன் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.  தொடர்ந்து அந்தோணிராஜ், மனைவி முனீஸ்வரியையும் வெட்டியுள்ளார்.  இதில் அவர் படுகாயமடைந்து உள்ளார்.

இதனை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.  இந்த நிலையில், 2 குழந்தைகளை படுகொலை செய்த தந்தை தலைமறைவாகி உள்ளார்.  தப்பியோடிய அந்தோணிராஜை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story