பொதுச்செயலாளராக மீண்டும் தேர்வு: சீதாராம் யெச்சூரிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து


பொதுச்செயலாளராக மீண்டும் தேர்வு: சீதாராம் யெச்சூரிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
x

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின்(சி.பி.எம்.) அகில இந்திய பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டதற்கு, தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். #MKStalin

சென்னை, 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின்(சி.பி.எம்.) அகில இந்திய பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டதற்கு, தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:–

மத்தியில் எதேச்சதிகார அரசாக மட்டுமின்றி, மதசார்பின்மை, ஜனநாயகம் போன்றவற்றிற்கும் அச்சுறுத்தலாக இருக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு 2019–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தக்க பாடம் புகட்ட சீதாராம் யெச்சூரி பாடுபடுவார்கள் என்றும், தேர்தல் களத்தில் மதசார்பற்ற சக்திகள் அனைத்தையும் ஓரணியில் திரட்டும் முயற்சிக்கு துணை நிற்பார் என்றும் நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story