ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு பாலியல் கொடுமை காப்பாற்றிய காவலர் சிவாஜிக்கு பாராட்டு பரிசு


ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு பாலியல் கொடுமை காப்பாற்றிய காவலர் சிவாஜிக்கு பாராட்டு பரிசு
x
தினத்தந்தி 24 April 2018 7:55 AM GMT (Updated: 24 April 2018 7:55 AM GMT)

ஓடும் ரெயிலில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபரிடம் இருந்து காப்பாற்றிய காவலர் சிவாஜியை பாராட்டி ஐ.ஜி பொன். மாணிக்கவேல் ரூ.5000 பரிசாக வழங்கினார். #IGPonManickavel

சென்னை

நேற்று இரவு சென்னையில் பறக்கும் ரெயிலில் பெண் ஒருவருக்கு இளைஞர் ஒருவர் பாலியல்  தொல்லை கொடுத்துள்ளார். தற்போது அவர் போலீசால் கைது செய்யப்பட்டு உள்ளார்.

நேற்று இரவு வேளச்சேரி-கடற்கரை செல்லும் பறக்கும் ரெயிலில் இந்த பாலியல் அத்துமீறல் சம்பவம் நடைபெற்று இருக்கிறது. அந்த ரெயிலின் பெண்களுக்கான பெட்டியில் பயணித்த 25 வயது பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் நடந்துள்ளது.

பெண்கள் பெட்டியில் ஏறிய, சத்தியராஜ் என்ற இளைஞர், அங்கு தனியாக இருந்த பெண்ணை பாலியல் ரீதியாக தொல்லை செய்துள்ளார். இதில் அந்த பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனால் உடனைடியாக அங்கே ரெயில்வே பாதுகாப்பு படை வந்தது.

பெண்ணின் சத்தம் கேட்டு வந்த ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் சிவாஜி, சத்யராஜை பிடித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ரயில்வே ஐ.ஜி பொன் மாணிக்கவேல் நேற்று இரவே நேரில் விசாரணை செய்தார். இதையடுத்து சத்தியராஜ் ரெயில்வே போலீசால் கைது செய்யப்பட்டார்.

ஓடும் ரெயிலில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபரிடம் இருந்து காப்பாற்றிய காவலர் சிவாஜியை பாராட்டி ஐ.ஜி பொன். மாணிக்கவேல் ரூ. 5000 பரிசாக வழங்கினார்.

Next Story