காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர் தற்கொலை - மன அழுத்தமா ? விசாரணை
சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் உள்ள காவல்நிலையத்தின் சிறப்பு உதவி ஆய்வாளா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். #PoliceSuicide #TNPolice
சென்னை,
சென்னையில் அமைந்துள்ள கொருக்குப்பேட்டையில் உள்ள மீன்பிடி துறைமுகம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியற்றி வருபவா் ஜோசப். 50 வயது மதிக்கதக்க இவா் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலைசெய்து கொண்டாா். இந்த சம்பவம் காவலா்கள் இடையே பேரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு பணிக்கு செல்லாமல் காசிமேடு மீன் துறைமுகம் சென்றதாக கூறப்படுகிறது. பின்னா் அங்குள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தொிகிறது.
இதை அறிந்த போலீசாா் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பாிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனா். மேலும், இந்த சம்பவம் தொடா்பாக பணியில் உள்ள பணிசுமையா அல்லது கடன் பிரச்சினை காரணமா என்று
வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் போலீசாா் விசாரணை செய்து வருகின்றனா்.
சமீப காலமாக தமிழ்நாட்டில் உள்ள காவலா்களின் தற்கொலை சம்பவம் அரங்கேறி வருவது கூறிப்பிடதக்கது.
Related Tags :
Next Story