காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சரத்குமார் உண்ணாவிரதம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சரத்குமார் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 25 April 2018 11:59 AM IST (Updated: 25 April 2018 11:59 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சென்னையில் இன்று உண்ணாவிரதம் நடந்தது.


சென்னை, 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தலைமையில் உண்ணாவிரதம் நடந்து வருகிறது. 

 காலை 8 மணிக்கு உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்று உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

உண்ணாவிரதத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தொடங்கி வைத்தார்.உண்ணாவிரதம் இருந்தவர்கள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்கள்.

உண்ணாவிரதத்தில் பங்கேற்ற சரத்குமார் மற்றும் தொண்டர்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்திருந்தனர்.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தொடர்ந்து கருப்பு சட்டையை அணியப் போவதாக சரத்குமார் தெரிவித்தார்.

Next Story