குறைகளை தெரிவிக்க ‘மய்யம் விசில் ஆப்’ கமல்ஹாசன் 30-ந்தேதி அறிமுகப்படுத்துகிறார்


குறைகளை தெரிவிக்க ‘மய்யம் விசில் ஆப்’ கமல்ஹாசன் 30-ந்தேதி அறிமுகப்படுத்துகிறார்
x
தினத்தந்தி 26 April 2018 2:20 AM IST (Updated: 26 April 2018 2:20 AM IST)
t-max-icont-min-icon

‘மய்யம் விசில் ஆப்’ (செயலி) விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

சென்னை, 

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கடந்த 22-ந்தேதி ‘யூ-டியூப்’ நேரலையில் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது, அக்கிரமங்கள், குறைகளை படம் பிடித்து காட்டும் வகையில் ‘மய்யம் விசில் ஆப்’ (செயலி) விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்தார். மேலும் எந்த அதிகாரியிடம் குறைகளை கொண்டு சேர்க்கவேண்டுமோ அதற்கான பணிகளை மக்கள் நீதி மய்யம் செய்யும் என்று தெரிவித்திருந்தார்.

‘மய்யம் விசில் ஆப்’பை வருகிற 30-ந்தேதி கமல்ஹாசன் அறிமுகப்படுத்த உள்ளார். இதற்கான பணிகளை மக்கள் நீதி மய்யத்தின் தகவல் தொழில்நுட்ப குழுவினர் செய்து வருகின்றனர். ‘மய்யம் விசில் ஆப்’ அறிமுகம் செய்வதற்கான முன்னோட்டமாக கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு நிமிடம் 10 வினாடிகள் ஓடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கமல்ஹாசன், ‘அக்கிரமங்கள், அநீதிகள், அநியாயங்கள் நம்மை சுற்றி நடப்பதற்கு கைகட்டி வேடிக்கை பார்க்கும் நாம் தான் காரணம். இதுதான் முதல் பிரச்சினை. இனி பிரச்சினைகளை பார்த்து கைகட்டி நிற்கவேண்டாம். ஏனென்றால் உங்கள் கையில் இனிமேல் விசில் இருக்கும். ‘மய்யம் விசில் ஆப்’-ல் உங்களை பாதிக்கும் பிரச்சினையை பதிவு செய்யுங்கள். ‘விசில்’ அது எப்படி கேட்காமல் போகும்’ என்று கூறியுள்ளார். 

Next Story