கர்நாடக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க முடியாது தேர்தல் அதிகாரிகள் அறிவிப்பு

கர்நாடக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க முடியாது தேர்தல் அதிகாரிகள் அறிவிப்பு
x
தினத்தந்தி 26 April 2018 3:49 AM IST (Updated: 26 April 2018 3:49 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு இரட்டை சிலை சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு இரட்டை சிலை சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இரட்டை இலை சின்னம்

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம்(மே) 12-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி வேட்புமனு தாக்கல் கடந்த 17-ந் தேதி தொடங்கி நேற்று முன்தினம் வரை நடைபெற்றது. இதில் 3,374 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். அ.தி.மு.க. காந்திநகர், கோலார் தங்கவயல், ஹனூர் ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

அந்த கட்சி சார்பில் காந்திநகர் தொகுதியில் எம்.பி.யுவராஜ், கோலார் தங்கவயலில் மு.அன்பு, ஹனூரில் ஆர்.பி.விஷ்ணுகுமார் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். நேற்று மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. அப்போது அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர்.

கடிதம் கொடுத்திருக்க வேண்டும்

இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், “மனுதாக்கல் செய்வதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு அ.தி.மு.க. சார்பில் கர்நாடகத்தில் போட்டியிடும் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குமாறு தேர்தல் அதிகாரிகளிடம் கடிதம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அந்த கட்சி சார்பில் அவ்வாறு கடிதம் கொடுக்காததால் இரட்டை இலை சின்னம் ஒதுக்க முடியாது” என்று அவர்கள் தெரிவித்தனர்.

Next Story