தமிழகம் முழுவதும் இன்று போராட்டம் ஆயிரக்கணக்கான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது
தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் நேற்றும் கைது செய்யப்பட்ட நிலையில், இன்றும் கைது நடவடிக்கை தொடர்கிறது. #JactoGeo
சென்னை
மீண்டும் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகத்தை இன்று செவ்வாய்க்கிழமை முற்றுகையிடப் போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்ததைத் தொடர்ந்து, பாதுகாப்புக்காக தலைமைச் செயலகத்தை சுற்றி போலீஸார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகத்தை இன்று செவ்வாய்க்கிழமை முற்றுகையிடப் போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அந்த அமைப்பின் நிர்வாகிகளை போலீஸார் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்ட நிலையில், திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறுமென அந்த அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து இன்று காலை சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் வந்து இறங்கிய ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 1000 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ள போராட்டம் காரணமாக தலைமைச்செயலகம் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தலைமைசெயலகம், மற்றும் சேப்பாக்கம் பகுதியில் சுமார் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தலைமைச் செயலகத்துக்கு செல்லும் சாலைகளில் தடுப்புகளை வைத்து போலீஸார் தீவிர கண்காணிப்பில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல், அவ்வழியாக செல்லும் வாகனங்களை சோதனைக்கு பிறகே போலீஸார் அனுமதித்து வருகின்றனர். தலைமைச் செயலகம் அமைந்துள்ள காமராஜர் சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
அண்ணாசாலை, சேப்பாக்கம், கடற்கரை சாலைகளில் 6000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை அருகே வண்டலூரில் வாகன சோதனையின்போது ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.
ஜாக்டோ ஜியோ அமைப்பு போராட்டம் அறிவித்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை நேப்பியர் பாலம் அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு; 4 அரசு ஊழியர்கள் கைது
விழுப்புரம் உளூந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்
சென்னை வாலாஜா சாலையில் ஜாக்டோ- ஜியோ அமைப்பைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், எழும்பூர் ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகனங்களில் வந்து இறங்கிய ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
இன்று பிற்பகலில் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம். இன்று மாலை ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் கூடி வேலைநிறுத்தம் செய்வது குறித்து முடிவெடுப்போம் என ஜாக்டோ ஜியோ அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story