அருப்புக்கோட்டை அருகே பேராசிரியை நிர்மலா தேவி வீட்டில் கொள்ளை முயற்சி
நிர்மலா தேவியின் வீட்டில் ஆவணங்களை திருட முயற்சியா அல்லது பணம், நகை கொள்ளை முயற்சியா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். #NirmalaDevi
விருதுநகர்
அருப்புக்கோட்டை கல்லூரியில் பணியாற்றி வந்த பேராசிரியர் நிர்மலா தேவி மாணவிகளுக்கு பாலியல் வலை விரித்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, நிர்மலா தேவி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். நிர்மலா தேவிக்கு விதிக்கப்பட்ட நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவதை தொடர்ந்து, மதுரையில் சிறையில் இருந்து நிர்மலா தேவி இன்று காலை விருதுநகர் அழைத்துச் செல்லப்பட்டார்.
விருதுநகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிர்மலா தேவிக்கு மே 23ம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், அருப்புக்கோட்டை ஆத்திப்பட்டி காவியா நகரில் உள்ள நிர்மலா தேவி வீட்டில் இன்று கொள்ளை முயற்சி நடந்துள்ளது. போலீசார் சீல் வைத்துள்ள அந்த வீட்டில் பின்பக்க வழியாக பூட்டை உடைத்து திருட முயற்சி நடந்துள்ளது. இது குறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்து உள்ளனர்.
அங்கு விரைந்த போலீசார் ஆவணங்கள், பணம் மற்றும் நகைகள் கொள்ளை போயுள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story