அரக்கோணம்-திருத்தணி இடையே ரெயில் சேவை இன்று சீராகும் தெற்கு ரெயில்வே அறிவிப்பு


அரக்கோணம்-திருத்தணி இடையே ரெயில் சேவை இன்று சீராகும் தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 10 May 2018 3:12 AM IST (Updated: 10 May 2018 3:12 AM IST)
t-max-icont-min-icon

அரக்கோணம் யார்டில் நடைபெற்று வரும் ரெயில்வே பராமரிப்பு பணிக்காக, கடந்த சில நாட்களாக மின்சார மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வந்தன.

சென்னை, 

அரக்கோணம் யார்டில் நடைபெற்று வரும் ரெயில்வே பராமரிப்பு பணிக்காக, கடந்த சில நாட்களாக மின்சார மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வந்தன. ஏராளமான ரெயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டன.

இந்தநிலையில் இன்று (வியாழக்கிழமை) அரக்கோணம்-திருத்தணி இடையே பாதிக்கப்பட்டிருந்த ரெயில் சேவை சீரடையும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதேவேளையில் இன்று காட்பாடி-அரக்கோணம் இடையே அதிகாலை 4.35 மணிக்கும், அரக்கோணம்-கடப்பா இடையே காலை 7.05 மணிக்கும், கடப்பா-அரக்கோணம் இடையே பிற்பகல் 2.45 மணிக்கும், அரக்கோணம்-சென்னை சென்டிரல் இடையே இரவு 10.15 மணிக்கும் இயக்கப்பட இருந்த பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

மேற்கண்ட பயணிகள் ரெயில் சேவை பாதிப்பு, நாளை (வெள்ளிக்கிழமை) சரியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கண்ட தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

Next Story