ஜெகதீஷ்துரை குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் முதல்–அமைச்சரிடம், எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ. கோரிக்கை

ஜெகதீஷ்துரை குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் முதல்–அமைச்சரிடம், எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ. கோரிக்கை
x
தினத்தந்தி 11 May 2018 12:25 AM IST (Updated: 11 May 2018 12:25 AM IST)
t-max-icont-min-icon

சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, நாங்குநேரி எம்.எல்.ஏ. எச்.வசந்தகுமார் நேற்று சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்.

சென்னை, 

சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, நாங்குநேரி எம்.எல்.ஏ. எச்.வசந்தகுமார் நேற்று சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்.

அதில், நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் மணல் கொள்ளையை தடுக்கும் முயற்சியின்போது, கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்ட போலீஸ்காரர் ஜெகதீஷ்துரையின் மரணத்தை வீரமரணமாக அறிவிக்க வேண்டும். ஜெகதீஷ்துரையின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரண உதவி வழங்கி, அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும். மேலும் ஜெகதீஷ்துரையின் பிள்ளைகள் படிப்பு செலவை அரசே ஏற்கவேண்டும், என்று குறிப்பிட்டு இருந்தார்.

Next Story