வழிப்பறி கொள்ளையர்களால் தாக்கப்பட்டு உயிர் பிழைத்த பெண் ஐ.டி. ஊழியர் காவல் ஆணையருக்கு நன்றி
வழிப்பறி கொள்ளையர்களால் தாக்கப்பட்டு உயிர் பிழைத்த ஐ.டி. ஊழியர் லாவண்யா காவல் ஆணையரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
சென்னை
ஐ.டி. ஊழியர் லாவண்யா போலீஸ் சென்னையில் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதனை சந்தித்த தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து காப்பாற்றிய காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
என்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து என்னை காப்பாற்றிய காவல்துறையினருக்கு நன்றி. எனது தைரியத்தால் மட்டும் இதிலிருந்து விடுபடவில்லை, காவல்துறை உள்ளிட்ட பலரது ஆதரவால்தான் விடுபட்டுள்ளேன்.என கூறினார்.
சென்னையில் மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் கூறியதாவது;-
குழந்தை கடத்தல் தொடர்பாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; குண்டாசும் பாயும். குழந்தை கடத்துபவர் என சந்தேகம் இருந்தால், பொதுமக்கள் சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது, காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க வேண்டும் என கூறினார்.
Related Tags :
Next Story