ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் தலைமைச் செயலாளர் உத்தரவு


ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் தலைமைச் செயலாளர் உத்தரவு
x
தினத்தந்தி 12 May 2018 1:40 AM IST (Updated: 12 May 2018 1:40 AM IST)
t-max-icont-min-icon

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மாநிலத்துக்கு உள்ளேயும், வெளிமாநிலத்துக்கும் அரசு முறை பயணம் மேற்கொள்ளும்போது சில கட்டுப்பாடுகள் விதித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார். #GirijaVaidyanathan #EdappadiPalanisamy

சென்னை, 

தமிழகத்தில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மாநிலத்துக்கு உள்ளேயும், வெளிமாநிலத்துக்கும் அரசு முறை பயணம் மேற்கொள்ளும்போது சில கட்டுப்பாடுகள் விதித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, அரசுத் துறை செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட கலெக்டர்கள் ஆகியோர் தலைமையகத்தை விட்டு வெளியே தமிழகத்துக்குள் அரசு முறை பயணம் செய்ய வேண்டும் என்றால் தலைமைச் செயலாளரின் அனுமதி உத்தரவைப் பெறவேண்டும்.

வெளிமாநிலங்களுக்கு அரசுத் துறை செயலாளர்கள் அரசு முறைப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால், தலைமைச் செயலாளர் மூலமாக முதல்-அமைச்சரின் அனுமதியை பெற்றிருக்க வேண்டும்.

அரசு துறைத் தலைவர்கள், மாவட்ட கலெக்டர்கள் ஆகியோர் வெளிமாநிலங்களுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால், துறை செயலாளர்கள் அல்லது தலைமைச் செயலாளர் அல்லது முதல்-அமைச்சர் மூலம் அரசின் முன் அனுமதியைப் பெறவேண்டும்.

அரசுத் துறை செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட கலெக்டர்கள் தவிர மற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், தலைமையகத்தை விட்டு வெளியே தமிழகத்துக்குள் அரசு முறை பயணம் செய்ய வேண்டும் என்றால் அவர்களின் மேல் அதிகாரியிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அவர்கள் தமிழகத்தை விட்டு வெளிமாநிலங்களுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட துறை செயலாளரின் உத்தரவைப் பெறவேண்டும்.

Next Story