போராட்டம் நடத்த முயன்ற தி.மு.க.வினரை முன்கூட்டியே கைது செய்வதா? மு.க.ஸ்டாலின் கண்டனம்
போராட்டம் நடத்த முயன்ற தி.மு.க.வினரை முன்கூட்டியே கைது செய்வதா? என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மாநில சுயாட்சி கொள்கைக்கும், மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படையிலான அரசியல் சட்டத்திற்கும் முற்றிலும் விரோதமாக, ஏற்கனவே மேற்கொண்ட மாவட்ட ஆய்வுகளின் தொடர்ச்சியாக, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகளுடன் கவர்னர் ஆய்வு மேற்கொள்வதை கண்டித்து, தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தும் முன்பாகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற போர்வையில், தி.மு.க.வினரை கைதுசெய்வதற்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
கவர்னர் இதற்கு முன் ஆய்வுக்காக சென்ற இடங்களில் எல்லாம் தி.மு.க.வினர் போராட்டம் நடத்தியபோது அமைதி காத்த தமிழக காவல்துறை, இப்போது விருதுநகர் மாவட்டத்திற்கு செல்லும்போது மட்டும் தி.மு.க.வினரை கைது செய்தது ஏன்?. தமிழகத்தில் நடப்பது ‘போலீஸ் ராஜ்யம்’ தான் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் காட்டவா?.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story