காவிரி ஆற்றில் மணல் அள்ள தடை கோரி வழக்கு தஞ்சை கலெக்டர் பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
காவிரி ஆற்றில் மணல் அள்ள தடை கோரி வழக்கு தஞ்சை கலெக்டர் பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மதுரை,
தஞ்சை மாவட்டம், திருவையாறு அருகே பவனமங்கலத்தை சேர்ந்த பாலகணேசன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
எங்கள் பகுதி வாழ்வாதாரமாக காவிரி ஆறு உள்ளது. ஆனால், பவனமங்கலத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆற்று பாசனமே கிடைக்கவில்லை. பம்புசெட் மூலமாகவே விவசாய பணிகளை மேற்கொண்டு வருகிறோம். நடுப்படுக்கை மற்றும் பவனமங்கலத்திற்கு இடையில் காவிரி ஆற்றுப்படுகையில் மணல் குவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விதிகள் பின்பற்றப்படாமல் மணல் குவாரிக்கு அனுமதி அளித்துள்ளனர். இங்கு அளவுக்கு அதிகமாக மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கூட்டுக்குடிநீர் திட்டங்கள் பாதிக்கிறது. எனவே, மணல் குவாரிக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.கோவிந்தராஜ், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர், மனு குறித்து தஞ்சை கலெக்டர், பூடலூர் தாசில்தார், கனிமவளத்துறை உதவி இயக்குனர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஆகியோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.
Related Tags :
Next Story